யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.
1550 Kg எடை கொண்ட ஊர்தியை (பட்டாரக வாகனம்) 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் தாடியால் இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம் 48 செக்கனில் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த உலக சாதனை நிகழ்வு, யாழ்.மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலைய முன்றலில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கைக்கான கிளை தலைவர் யோ.யூட்நிமலன் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.
