வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சில மணித்தியாலங்களில் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் உதவியுடன் மரம் அகற்றப்பட்டமையினையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.