வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களையும் நேற்றைய தினம் புதன் கிழமை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்ற வீடொன்றே இவ்வாறு தீ வைக்கப்பட்டு, 21 வயதுடைய யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும், தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் உயிரிழந்த 34 வயதுடைய நபரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பிரதான சந்கேநபரால் பணம் வழங்கப்பட்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.