வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வவுனியா பொலிஸ்நிலையத்தில் செய்த முறைப்பாடுக்கமைய, பாடசாலையை சுற்றியுள்ள சிசிடிவி கமரா அமைப்புகளை பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன்போது, நபர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை சுமந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.