வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உதவித் திட்டங்கள் செயற்படுத்தலும் பாராட்டு விழாவும் இன்று பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பமானதுடன் அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றன.
பின்னர் வறிய மாணவர்களுக்கான கல்விசார் ஊக்குவிப்புகள் வழங்கல், மாற்றுத்திறனாளிகளின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல், உள்ளூர் எழுத்தாளர் கௌரவிப்பு, சுகாதார பொதிகள் வழங்கல், வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக சங்கானை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் கவிதா உதயகுமார் கலந்து சிறப்பித்ததுடன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் க.இலங்கேஷ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், கௌரவம் பெறுவோர், உதவித் திட்டங்கள் பெறுவோர், பாடசாலை மாணவர்கள், பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டனர்.


