பேருவளை பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்ட வலம்புரி சங்குடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பேருவளை பொலிஸாரால் நேற்று செவ்வாய் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய சந்தேக நபர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 160 கிராம் எடையுடைய குறித்த சங்கினை ஐந்து இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் எடுத்து வந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.