வறுமையை ஒழித்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல், சத்துணவு மூலம் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுவித்தல், உணவு பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான கிராமத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபாவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிசெய்ய கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மையங்களை வலுப்படுத்த பல துறைகளை ஒருங்கிணைத்து பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது .

சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் நிகழ்வை ஆரம்பித்து வைக்க இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபா திட்டத்தின் தொடர்பில் தெளிவான விரிவுரை ஒன்றை வழங்கினார். இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.முஹம்மட் கபீர், கணக்காளர் ஐ.எம்.பாரிஸ், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம். அஸ்லம், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யூ.எல்.எம். சலீம், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல். தாசிம், சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சபூர் தம்பி, விவசாயப் போதனாசிரியர் ஏ.எல்.கரீம், சம்மாந்துறை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.