பாணந்துறை – வலான பகுதியில் வர்த்தகர் ஒருவரின், கைகளை கட்டிவிட்டு ஆயுதமொன்றினால் தாக்கி, அவரது வீட்டிலிருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வர்த்தகரின் வீட்டுக்குள் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நுழைந்த அடையாளம் தெரியாத மூவர் அவரை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த தங்கத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான வர்த்தகர் தற்போது பாணந்துறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.