பணமோசடியின் கீழ் வரி ஏய்ப்பைக் குற்றமாக மாற்றுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதுடன் இது தொடர்பான திருத்தங்கள் ஏற்கனவே சட்ட வரைவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் கீழ், வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் மூலம் குற்றம் இழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.