மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்று, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
பாதீட்டில் மலையகத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், அதற்கான யோசனைகளை முன்வைத்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் மலையக மக்கள் நன்றி தெரிவித்தனர்.