-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயர் தேவஸ்தானத்தின் வருடாந்த 10ஆவது திருவிழாகிய இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள், உள்வீதியுடாக வலம்வந்து வெளிவீதி வந்து தேரேரி அருள் பாலித்தார்.
ஆலய பிரதம குரு கணநாதர்குருக்கள் தலைமையில் இந்த திருவிழா நடைபெற்றது. இவ் திருவிழாவில் வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த அடியார்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
















