கிரேக்க நாட்டில் வனப்பகுதியில் இருந்து 18 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கிரேக்க தீயணைப்பு சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
கடந்த நான்கு நாட்களில், காட்டுத் தீயினால் கிரேக்கத்தின் வட பகுதி காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.
துருக்கிய எல்லையில் இருந்து சற்று அருகில் உள்ள வடகிழக்கு கிரேக்கத்தின் எவ்ரோஸ் பகுதியும் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.