தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து நேற்று செவ்வாய் கிழமை மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், கிறேட்வெஸ்டன் பகுதிக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவராக இருக்கலாம் என்றும் ஆனால் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.