பிட்டிகல, தல்கஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகில் உள்ள வெறிச்சோடிக் கிடந்த காணியில் பதுங்கியிருந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என, தெரியவருகின்றது
படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வட்டிக்குக் கடன் கொடுத்த சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என, பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரை கைது செய்ய பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.