-யாழ் நிருபர்-
தேசிய ரீதியிலான பரீட்சையான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் இந்த பரீட்சை ஆரம்பமானது. மழையின் மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
இந்த தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக் கல்விப் பணிப்பளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார்.
அத்துடன் இதற்காக 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயல்படவுள்ளது.
இதேநேரம் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும மாணவர்களில் யாழ்ப்பாணம் 01 வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 782 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய அதேநேரம், யாழ்ப்பாணம் 02 வலயத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 54 பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 208 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2ஆயிரத்து 219 மாணவர்களும், முல்லைத்தீவில் 09 இணைப்பு நிலையங்களின் கீழ் 24 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 162 மாணவர்களும்,
வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய அதேநேரம் மன்னாரில் 16 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 176 மாணவர்கள் தோற்றினர் என அவர் மேலும் தெரிவித்தார்.


