-யாழ் நிருபர்-
வட மாகாண ஆளுநர் திருமதி.பி. எஸ்.எம். சார்ள்ஸ் அக்டோபர் 03 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் சந்தித்தார்.
சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதே வேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினையும் தெரிவித்தார்.
இதன் போது இந்திய உயர் ஸ்தானிகர் வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என்று கூறினார்.