தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
அதன்படி குறித்து சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேனும் முதலில் தேர்தலை நடத்துவதற்கு வலியுறுத்துமாறு கோரப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் இதன்போது மாகாண சபை முறைமை மற்றும் பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்தார்.