தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் யாழ் மாவட்டங்களில் பூரண ஒத்துளைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைகள் வழமை போன்று இயங்கியதுடன் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர் எனினும் மாணவர்களுடைய வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது.
அதன்படி மட்டக்களப்பில் போக்கு வரத்து சேவைகளும், பாடசாலைகளும் வழமை போல் இயங்கியதுடன் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தது, செங்கலடி பகுதியில் பொதுப்போக்குவரத்து, தனியார் பேருந்து சேவை வழமைவிட குறைவாகவும் வர்த்தக நிலையங்கள் முளுமையாக மூடப்பட்டிருந்தது, ஏறாவூர் பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகளவான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் ஒரு சில உணவகங்கள் மாத்திரம் வழமை போல் இயங்கிக்கொண்டிருந்தது, அதேவேளை காத்தான்குடி பிரதேசமும் வெள்ளிக்கிழமை என்பதால் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் ஏனைய செயற்பாடுகள் வழமை போல் நடை பெற்றது.
மேலும் இந்த ஹர்த்தால் போராட்டத்திற்கு அதிகமான தனியார் நிறுவனங்களும் தனியார் போக்குவரத்து சேவை வழங்குனர்களும் முளுமையான ஆதரவினை வழங்கியதுடன் அரச திணைக்களங்களும் அரச பாடசாலைகளும் பொது மக்களின் நலன் கருதி சேவையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

