வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் வகுப்பறைகள் சிறிதாகவும் ஆசிரியர்களின் ஓய்வறைகள் பெரிதாகவும் காணப்படுவதாக யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபசெயலாளர் ஹொல்வின் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் ஆசிரியர் இடமாற்றம் உரிய முறையில் இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.