வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்கும், கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்குமிடையிலான, 14வது நீலங்களின் சமர், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.
முதல் நாள் போட்டியில், முதல் இனிங்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி, 134 ஓட்டங்களை பெற்றிருந்தனர், கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி முதல் இனிங்சில் 122 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இனிங்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 169 பெற்றிருந்தனர்.
வெற்றி இலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயிக்க, துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி, 48.03 பந்து பரிமாற்றங்களில் 95 ஓட்டங்களைப் பெற்ற வேளை, அனைத்து இலக்குகளையும் இழந்த நிலையில், கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 86ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
இது வரை நடைபெற்ற 14 வடக்கின் நீலங்களின் சமரில், கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 போட்டிகளிலும், கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 04 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, 05 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத்தொடரில்,
சிறந்த பந்து வீச்சாளராக இந்துக்கல்லூரி அணியின் வீரர் கே.கரிசாந்தன்
சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரி அணியின் வீரர் ஜெ.மதுஷன்
சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி அணி வீரர் என். சாருஜன்
தொடரின் ஆட்டநாயகனாக மத்திய கல்லூரி அணி வீரர் ஜீ.கெளசிகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.