வக்ருவெல மெனதென பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ‘வசனா’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
புத்தல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது குறித்த நபரிடம் இருந்து 5,600 மில்லி கிராம் ஹெரோயினும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனி நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.