அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண.கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை 90 நாட்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். .
கடந்த 18ஆம் திகதி கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, வசந்த முதலிகே உட்பட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைத் தவிர ஏனைய 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் முதலில் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர், தற்போது பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு கீழ் அவர்கள் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர்.