நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 309.56 ஆகவும் மற்றும் விற்பனை பெறுமதி 328.14 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311.54 ஆகவும் மற்றும் விற்பனை பெறுமதி 326 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311 ஆகவும் மற்றும் விற்பனை பெறுமதி 325 ஆகவும் பதிவாகியுள்ளது.


