வங்கக் கடல் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 5.32 மணியளவில் 4.2 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.