இரத்தினபுரி பகுதியில் பிரபல பாடசாலை மாணவன் கசிப்பு விற்பனை செய்த மாணவன் பொலிஸாரின் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளான்.
குறித்த பாடசாலையில் 9ஆம் தரத்தில் படிக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கசிப்பு விற்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கலவானை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் குறித்த மாணவன் இந்த கசிப்பை தண்ணீர் போத்தலில் கொண்டுவந்து பாடசாலையில் வைத்து கோப்பையில் ஊற்றி உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த போது அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.