வாதுவ மொல்லிகொட பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் தவிசாளரின் வீட்டில் தகராறு ஏற்பட்டதாகவும், இதன் போது களுத்துறை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தவிசாளரும், மேல் மாகாண முன்னாள் உறுப்பினருமான ஜி.என்.பி.பெரேரா உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.