கட்டுவன – ஊருபொக்க வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை லொறி ஒன்று மரத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதுடன் இதில் லொறியில் பயணித்த நால்வரும் காயமடைந்து கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஏனைய மூவரும் வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மற்றுமொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வலஸ்முல்ல வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.