ஊழியர்கள் விடுமுறை எடுப்பது என்றாலே ஒரு போராட்டமாகவே உள்ளது.
வேலை அழுத்தம் நிறைந்து இந்த உலகமா இருக்கின்ற வேளையில் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் கனிகா, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு விடுமுறை கேட்டுள்ளார்.
அதாவது சனி மற்றும் ஞாயிறு விடுமுறை சேர்த்து ஐந்து நாட்கள் நீண்ட விடுப்பு கிடைக்கும் என்பதால் அவர் இந்த விடுமுறையை நாடியுள்ளார்.
இதில் என்ன சர்ப்ரைஸான விடயமென்றால்,
கனிகாவின் மேலாளர், விடுமுறையை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஒரு வாழ்த்துச் செய்தியுடன் அதை அனுப்பியுள்ளார்.
“தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். பயணத்தை முழுமையாக அனுபவியுங்கள். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்த்து, புத்துணர்ச்சி பெறுங்கள். உங்கள் அலுவலகப் பணிகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.”
இது குறித்து கனிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், விடுப்பு விவகாரத்தில், பெரும்பாலான அதிகாரிகளுக்கு மத்தியில் எங்கள் மேனேஜர் தனித்துவமாக விளங்குகிறார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.