சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்தமையினால் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை வெள்ளி கிழமை முதல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இறுதியாக ஜூலை மாதம் 4 ஆம் திகதி குறைத்திருந்தது.