நாளாந்த எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தினசரி விநியோகம் 30,000 தொடக்கம் 40,000 சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயுலிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும்இ எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.