இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 685 ரூபாவால் அதிகரித்து, அதன் புதிய விலை 4250 ரூபாவாகும்.
மேலும், 5 கிலோ கிராம் சிலிண்டர் 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 1707 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரித்து, அதன் புதிய விலை 795 ரூபாவாக பதிவாகியுள்ளது.