யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் மாப்பிள்ளையை பெண் மருத்துவர் பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லண்டனில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31வயதான இளைஞனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு வைத்தியசாலை ஒன்றில் பயிற்சி பெற்று வருவரும் பெண்ணுக்கும் யாழில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது பெண்மருத்துவர் லண்டன் இஞ்சினியர் தனக்கு வேண்டாம் என கூறி பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிந்து நிற்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்கு துாது சென்ற தரப்பிடம் இஞ்சினியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாததால் கணவரிடம் இருந்து பிரிய மருத்துவர் முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.
இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்ட பலரும் இருவரும் நல்ல ஜோடிப்பொருத்தம் என ஆச்சரியப்பட்டதாகவும், இருவரது புகைப்படங்களும் திருமண நிகழ்வை புகைப்படம் எடுத்த நிறுவனத்தால் சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.