அளுத்கம பகுதியில் ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்
களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முறைப்பாட்டாளர் மற்றொரு நபருடன் அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சென்று 1230 ரூபாய்க்கு முட்டை ரோல்ஸ், பணிஸ், மீன் ரோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார். இதன்போது கொள்முதல் செய்யப்பட்ட ரோல்ஸில் முட்டை போன்ற வெள்ளை நிற இறப்பர் போன்ற பொருள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.