இந்தியாவின் கும்பே அருவிக்குச் சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலமான அன்வி காம்தர் (வயது – 27) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் மீட்டனர்.
எனினும் அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்குச் செல்வது போலப் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். தற்போது இந்த அருவியைக் காண்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்று வருகின்றமை குறிப்பிடதக்கது.ரீல்ஸ் எடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்