வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சு தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் வழங்கி முடிக்க வேண்டும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திலோ அல்லது பிரதேச செயலகத்திலோ அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத இறுதிக்குள் இலக்கங்களை வழங்கி முடிக்க முடியாததால் ஏப்ரல் மாதம் வரை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.