இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தமது நன்றிகளை வெளிப்படுத்தினார்.
வடக்குஇ கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦ வீடுகள் மற்றும் மலையகத்துக்கு வழங்கிய 10,௦௦௦ வீடுகள் தொடர்பிலும் , ங்கு பிரஸ்தாபித்த தலைவர் ரிஷாட், இதுவரை எந்தவொரு நாடும் இவ்வாறான உதவிகளை செய்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய அவர், நெருக்கடியான காலங்களின் போது இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் போன்றுஇ இனியும் உதவ வேண்டியதன் கடப்பாட்டையும் எடுத்துரைத்தார்.
இதேவேளைஇ இங்கு கருத்து வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்,
தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இன்னோரன்ன பல உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் பல கோடி ரூபாய்களை இந்தியா செலவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் பிரதித் தலைவர் என்.எம்.சஹீட் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










