பயணப் பையில் 6 வெற்று ரவைகளை வைத்துக்கொண்டு ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபர் ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு வௌ்ளிக்கிழமை காலைவந்தபோது, அவரது பயணப் பையை ஸ்கேன் செய்தபோது, வெற்று ரவைகள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து தலதா மாளிகை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தலைமையக பொலிஸாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது குறித்த நபர்இ தனக்கு சொந்தமான நிலம் வைத்திருப்பவர் என்றும் சட்டரீதியான துப்பாக்கியை பயன்படுத்துபவர் என்றும் தனக்குத் தேவையான மருந்துகளை கண்டி ஒளடத சந்தையில் கொள்வனவு செய்ய வந்த போது தலதா மாளிகைக்கு வந்ததாகவும், பையில் வெற்று ரவைகள் இருந்தமை தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியின் ஆவணங்களை கொண்டு வருமாறு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.