தெமட்டகொடை ரயில் நிலையத்தில் ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டிருந்த 1008 மீற்றர் செப்பு கம்பியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14 இல் வசிக்கும் 31 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெமட்டகொடை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலாம் தர குளிரூட்டப்பட்ட ரயிலில் ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டிருந்த 18 இலட்சம் ரூபா பெறுமதியான 1008 மீற்றர் செப்பு கம்பி திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு தொடர்பில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெமட்டகொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கொழும்பு 14 இல் வசிக்கும் 31 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.