கொழும்பு, மாளிகாவத்தை தொடருந்து முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் கழிப்பறையிலிருந்து சிசுவொன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
தெமட்டகொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த விவகாரம் குறித்து தற்சமயம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குறித்த ரயில் கழிப்பறையில் இருந்து கடந்த வாரம் தூய்மை பணியாளர் ஒருவரால் சிசுவின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் புத்தளம் முதல் கொழும்பு – கோட்டை வரையிலான அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் சிசிடிவி காட்சிகளைக் விசாரணைக்காக கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.