கிளிநொச்சி ஆனையிரவு, பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உமையாள்புரம் பகுதியைச்சேரந்த கால்நடை உரிமையாளரின் 11 பசு மாடுகளும் 6 நாம்பன் மாடுகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே இந்த கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.