குடஹகபொல ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் குடஹகபொல ரயில் கடவையில் போடப்பட்டிருந்த சமிக்ஞைகளை காரின் சாரதி, கவனிக்காமல் சென்றமையினாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது காரில் நான்கு பேரும் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.