ஹட்டன் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிப்பதற்கா காத்திருந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா, நல்லதண்ணி பகுதியை சேர்ந்த பி.எஸ். ஆறுமுகம் (வயது – 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரயில் வரும் வரை பயணிகள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உயிரிழந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.