குருணாகல், அம்பன்பொல பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு ரயிலில் மோதி நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு நேர தபால் ரயிலில் மோதியே யானைகள் உயிரிழந்துள்ளன.இதன் காரணமாக குறித்த மார்க்கத்தில் ரயில் சேவை தாமதமடைந்திருந்தது.