களுத்துறை வடக்கு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை காலை ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ரயில் பாதையை கடக்கும் போது தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.