ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் – அனுரகுமார திஸாநாயக்க !
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரனிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவும் கைது செய்யப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர், அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றினூடாக அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்