முன்னாள் ஜனாதிப ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக வெளிவந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக தற்போது 163 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் கூறியுள்ளார்.