முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார், என இன்று செவ்வாய்க்கிழமை தகவல் வெளிவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இதனை உறுதி செய்துள்ளார்.
அவர் இது தொடர்பில்தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார், ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவதில் கவனம் செலுத்துவார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன ஆகியோர் சற்று முன்னர் திரு விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தினர்.