ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்காது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது, என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கலந்துரையாடலை தொடர்ந்து, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.