ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக் கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. நடிகர்கள, கலைஞர்கள் , பொதுமக்கள் என இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ராமநாயக்க அரசியல் பழி வாங்கலுக்கு உள்ளாகிய நிலையிலேயே சிறைவாசம் அனுபவித்த வருகின்றார்.
வெசாக் போயா தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மன்னிப்பின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.