மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மிஹிந்தலை புனித தலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறியாமல் நேற்றிரவு மிஹிந்தலையை வழிபட வந்த பிரான்ஸ் பிரஜைகள் உட்பட 50 பேர் கொண்ட வெளிநாட்டினர் மின் பந்தங்களுடன் மிஹிந்தலை மலையில் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.